வெள்ளி, 16 அக்டோபர், 2009

தொப்புள் கொடி உறவுகளே
கடவுள் வார்த்தையை கேளுங்கள்
M.S.Rahmathullah
அல்லாஹ்வின் பெயரால்
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான் அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன் அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் 30:40)
அல்லாஹ்வுடன் வேறு எந்த கடவுளையும் அழைக்காதீர்கள் அவனைத்தவிர வேறுகடவுள் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும். அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது. இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் .(திருக்குர்ஆன் 28:88)
அச்சமும், ஆசையும் ஏற்படும்படி (அல்லாஹ்) அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும் பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 30:24)
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 13:3)
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை அறிவுடையோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (திருக்குர்ஆன் 29:43)
உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான் மேலும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் 16:78)
இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்த கடவுள்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் 'எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம் என்று அவர்கள் கூறுவார்கள்.அதற்கு (நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே என்று கூறிவிடும். இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள். பின்னர் இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை எல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விடும். (திருக்குர்ஆன் 16: 86,87)
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் (அத்தெய்வங்களை நோக்கி) 'என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள் 'யாஅல்லாஹ்! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லை! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய். அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள் மேலும்அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்' என்று கூறுவர். (திருக்குர்ஆன்-25:17,18)
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான் அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன் அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் 30:40)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக