புதன், 3 அக்டோபர், 2012

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?
N.K.Abdullah

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) لقمان : 34


‘மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று அறியாது. எந்த ஆத்மாவும் தான் எங்கே மரணிப்பேன் என்று அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன் நுட்பமானவன். லுக்மான்:34

இவ்வசனத்தில் இறைவன் 5விடயங்களைப்பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்கிறான். அதில் கருவரைகளில் உள்ளவை பற்றிய அறிவும் ஒன்று. இந்த வசனம் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு முரண்படுவதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மருத்துவ அறிவியல் இதனை நிரூபிக்கிறது என்பதே உண்மையாகும். அதனை தெரிந்துகொள்ள முன்னர் இந்த வசனம் என்ன சொல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்பது சிசு ஆணா பெண்ணா என்பதை மாத்திரங் குறிக்கவில்லை. விந்திலிருந்து குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? ஒற்றையா? இரட்டையா? என்பவைகளையும் இவ்வசனமும் குறிக்கிறது. அல்குர்ஆனில் சில வசனங்கள் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றன.

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6) آل عمران

‘அவனேகருவரையில் உங்களை அவன்விரும்பியவாறு வடிவமைக்கிறான்” ஆலு இம்ரான்:6