திங்கள், 13 செப்டம்பர், 2010

www.orkadavul.com

ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?
பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன் (குர்ஆன் 24:30)இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது.
இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'ஸந்தேகம்' வராது.மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.
மிகவும் எதார்த்தமாகச் சொல்வதென்றால், சகோதரி முன் ஒரு சகோதரன் அரைகுறை ஆடையுடன் அல்லது அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து நிற்பதை தவறாகக் கருதாத சமூகம், அதே ஒரு சகோதரி அவ்வாறு நின்றால் ஏற்குமா? என்று சிந்திந்தால், இஸ்லாம் எதார்த்தமாகவே மதக்கட்டளை இட்டுள்ளது என்பது விளங்கும்.பர்தா என்பது யூத-கிறிஸ்தவ மதத்தில் இல்லை என்பது உண்மையா? அது பற்றி ஆதாரங்களை முதலில் பார்க்கலாம். டாக்டர் மெனாகெம் பிரேயர் (பைபிள் இலக்கியப் பேராசிரியர், யேஷவா பல்கலைக்கழகம்) தன்னுடைய 'ரப்பானிய நூல்களில் பெண்கள்' என்ற புத்தகத்தில் 'யூதப்பெண்கள் வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொண்டு செல்வார்கள்; சில சமயங்களில் முகத்தையும் மூடிக்கொண்டு ஒரு கண்ணை மாத்திரம் திறந்திருப்பார்கள் என கூறுகிறார்.76 சில புராதான அறிஞர்களின் வாக்குகளை அவர் கோடிட்டு காட்டுகிறார், 'இஸ்ராயீலியப் பெண்கள் தலையை திறந்த வண்ணம் நடக்கக்கூடாது' 'தன் மனைவியின் தலைமுடியை மற்றவர்களை பார்க்க விடுபவன் சபிக்கப்படுவானாக.... அலங்காரத்திற்காக தலைமுடியை தொங்கவிடுபவள் வறுமையை வரவழவைப்பவளாவாள்' பிரார்த்தனைகளையோ அல்லது அருள்மொழிகளையோ தலையைத் திறந்திருக்கும் பெண்ணின் முன்னால் ஓதுவதை ரப்பானிய சட்டம் தடுக்கிறது. ஏனெனில் தலையை திறந்திருப்பது 'நிர்வாணமாக' இருப்பது போல் கணிக்கப்படுகின்றது.
தன்னயத்தியன் என்ற காலத்தின் போது தலையை மூடாத பெண் கற்பையே கேவலப்படுத்தியவளாக கருதப்பட்டாள் என டாக்டர் ப்ரேயர் மேலும் குறிப்பிடுகிறார்.அவள் தலை திறந்திருந்தால் இக்குற்றத்திற்காக அவளுக்கு நானுஸறு ஸஹஸிம் அபராதம் போடப்படலாம்.' ஆனால் இந்த யூதப் பெண்களின் இந்த திரை எப்பொழுதும் கற்பின் அடையாளமாக கருதப்படவில்லை என டாக்டர் ப்ரேயர் விளக்குகிறார். சில நேரங்களில் அது கற்பை குறிப்பதை விட உயர்ந்த நிலையையும் வசதியையுமே குறித்தது. கண்ணியமிக்க பெண்களின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் அடையாளமாக திரை திகழ்ந்தது. அவள் மற்றவர்கள் புக முடியாத தன் கணவனின் புனிதசொத்து என்பதிற்கு அடையாளமாகவும் அது திகழ்ந்தது.திரை பெண்ணின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்தை குறித்தது. கீழ்சாதிப்பெண்கள் தங்களை மேல்சாதிப்பெண்களாக காட்டிக்கொள்வதற்காக அடிக்கடி திரையை அணிந்து வந்தனர்.
திரை என்பது கண்ணியத்தின் அடையாளம் என்பதால்தான் யூத சமுகத்தில் உள்ள விபச்சாரிகள் அதை அணிய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விபச்சாரிகள் மரியாதைக்குரியவர்களாக தோற்றமளிக்கும் பொருட்டு வேறு விஷமான தலைமறைவை அணிந்து வந்தனர்.79 ஐரோப்பாவிலுள்ள யூதப்பெண்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, அவர்களின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியுள்ள உலக கலாச்சாரத்துடன் கலந்து போகும் காலம் வரை, திரையை அணிந்தே வந்தனர். ஐரோப்பிய வாழ்க்கையின் வெளிப்புற அழுத்தம் அவர்கள் தலையை திறந்து நடமாட நிர்ப்பந்தித்தது.தங்களின் வழமையான தலைமறைவை அணிவதற்குப் பதிலாக விக் அணிவது மிகவும் சௌகரியமானது எனக்கண்டனர். இன்று, மிகவும் பக்தியுள்ள யூதப்பெண்கள் கூட ஆலயத்திலல்லாது வேறு எங்கும் தலையை மறைப்பதில்லை.80 அவர்களில் ஹாஸிதிக் பிரிவைச் போன்ற சிலர் இன்னமும் விக்கை உபயோகித்து வருகின்றனர்.81இது சம்பந்தமாக கிறிஸ்தவ நடைமுறை என்ன? கத்தோலிக்க பெண் துறவிகள் பல நூற்றாண்டுகளாக தலையை மறைத்து வருகின்றனர் என்பது நன்கு அறியப்பட்டதே.
புனித பவுல் திரையைப்பற்றி மிகவும் சுவையான செய்தியை கூறுகிறார்:ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாறென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். ஜெபம் பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்: அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்: தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக் கடவுள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் கிமையுமாயிருக்கிற படியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை:ஸ்திரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸதிரீக்காகச் சிருஷடிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ;டிக்கப்பட்டவள். ஆகையால் (தென் காரணமாகவும்) மேலும் தூதர்களினிமித்தமும் ஸ்திரீயானவள் தலையின் மேல் (அதிகாரத்தின் அடையாளமாக). முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 11:3-10)
அது தேவனுடைய சாயலாயிருக்கும் ஆணிற்கு, அவனிலிருந்து, அவனுக்காக படைக்கப்பட்ட பெண்ணின் மேலிருக்கும் அதிகாரத்திற்கு அடையாளம்தான் திரை என்பதுதான் திரைக்கு புனித பவுலின் விளக்கம். புனித தர்த்தலியன் தன்னுடைய புகழ்பெற்ற 'கன்னிகள் திரையிடுதல்' பற்றிய கட்டுரையில் 'வீதிகளில் செல்லும் போது திரையணியும் இளம் பெண்களே, நீங்கள் ஆலயத்திலும் அணியுங்கள், அன்னியர் முன் திரையணியும் நீங்கள் உங்கள் சகோதரருக்கிடையே இருக்கும் போதும் திரையணியுங்கள்....' என்று கூறுகிறார். கத்தோலிக்க சர்ச்சின் கானானிய சட்டங்களில் பெண்கள் சர்ச்சிலிருக்கும் போது திரை அணிய வேண்டும் என்ற சட்டமும் ஒன்றாகும்.82 இன்றளவு வரை ஆமிஷ;, மென்னோமித் போன்ற சில கிறிஸ்தவ பிரிவுகள் தங்களின் பெண்களை திரையிட்டவர்களாக வைத்திருக்கின்றனர். திரைக்கு சர்ச் தலைவர்கள் கொடுக்கும் காரணம் பவுலடியார் புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் அதே காரணம்தான்: 'தலைமறைவு என்பது பெண் ஆணுக்கும் கடவுளுக்கும் அடிமைப்பட்டிருப்பதன் தலைமறைவு என்பது இஸ்லாத்தால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை மேலுள்ள ஆதாரங்கள் தெளிவாக்கும்.
இருப்பினும், இஸ்லாமும் அதை அங்கீகரித்தது. விசுவாசம் கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை தாழ்த்துமாறும் கற்பை காத்து வருமாறும் பெண்கள் தங்களின் தலைமறைவை தங்கள் கழுத்து மார்பு ஆகியன வரை இழுத்து விடவும் இஸ்லாம் கட்டளையிடுக்கின்றது(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். .... மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளை பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்: அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிரஸ மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)எதற்காக திரை அணிய வேண்டும்? இதை திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.
'நபியே, உம்முடைய மனைவிகளிடமும் பெண்களிடமும் மற்றும் மூமினான பெண்களிடமும் கூறுவீராக: அவர்கள் (வெளியே அவசியத்தின் காரணமாக) செல்லும் போது தங்களின் முந்தானைகளை தங்களின் மேல் தொங்க விட்டுக்கொள்ளட்டும். அதனால் அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்பட்டு துன்பத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக. (33:59)இதுதான் முழு விசயமுமே. பிறரால் துன்பத்திற்குள்ளாவதிலிருந்து பெண்களை திரை பாதுகாக்கிறது. திரையின் முழு நோக்கமே பாதுகாப்பு என்பதற்காகத்தான். இஸ்லாமிய திரை, கிறிஸ்தவ திரையைப் போலல்லாமல் பெண்ணின் மேல் ஆணுக்குரிய அதிகாரத்தின் அடையாளமோ அல்லது பெண் ஆணுக்கு அடிமை என்பதற்கான அடையாளமும் அல்ல.
இஸ்லாமிய திரை யூதப்பெண்களின் திரையைப் போலல்லாமல் செல்வச் செழுப்பின் அடையாளமோ அல்லது சில திருமணமான உயர்ந்த பெண்களின் தனிப்பட்ட தன்மையையோ காண்பிப்பதுமல்ல. இஸ்லாமிய திரையென்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக அணியப்படும் ஒழுக்கத்தின் அடையாளமே. நஷ்டப்பட்ட பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை விட எப்பொழுதும் பாதுகாப்பான முறையில் இருந்து கொள்வது சிறந்தது என்பதுதான் இஸ்லாமிய தத்துவமாகும்.
உண்மையில் திருக்குர்ஆன் பெண்ணின் உடலையும் அவள் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு அக்கறை எடுத்துள்ளதெனில், அவள் மீது எவறேனும் பொய்யாக களங்கம் சுமத்த முயலுவாரேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகிறது:எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் எற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (24:4)இந்த தண்டனையை கற்பழிப்பு குற்றத்திற்கு பைபிள் தந்திருக்கும் மிகச்சிறிய தண்டனையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்:நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோட சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோட சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்: அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்: அவன் உpரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. (உபாகமம் 22: 28:29)
இங்கு யார் உண்மையிலேயே தண்டிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் சிந்திக்கவேண்டும். கற்பழித்ததற்காக அபராதம் விதிக்கப்படுவது ஆணா அல்லது தன்னைக்கற்பழித்தவனை மணக்குமாறும் அவன் சாகும் வரை அவனோடு வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணா? இங்கு கேட்கப்பட வேண்டிய மற்றொரு கேள்வி: பெண்ணுக்கு அதிக பாதுகாப்பளிப்பது எது? திருக்குர்ஆனின் கடுமையான போக்கா அல்லது பைபிளின் தளர்ந்த போக்கா?சிலர், குறிப்பாக மேற்கத்தியர், பர்தா (பெண்ணை) பாதுகாக்கிறது என்பதை ஏளனம் செய்வர். கல்விiயையும், நல்ல பண்பாடு நிறைந்த நடைமுறைகளையும், கட்டுப்பாடாக இருப்பதன் அவசியத்தையும் பரப்புவதுதான் மிகச்சிறந்த பாதுகாப்பு என அவர்கள் கூறுவர். அது மிகச் சிறந்ததுதான். ஆனால் போதுமானதல்ல என நாம் கூறுவோம்.
பண்பாடு மாத்திரம் பாதுகாப்பு தருவதற்கு போதுமானதென்றால், ஏன் வட அமெரிக்காவிலுள்ள பெண்கள் இருட்டாக இருக்கும் தெருவில் தனியாக நடப்பதற்கோ ஏன் ஆட்கள் காலியாக இருக்கும் கார் நிறுத்துமிடங்களில் கூட நடப்பதற்கோ பயப்படுகின்றனர்? கல்வி மாத்திரம் தெற்கு தீர்வெனில், மிகவும் மதிக்கப்படும் குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் கூட பெண்களுக்கென தனியாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 'வீட்டிற்கு நடந்து செல்லும் வழி' ஏன் இருக்கிறது? மனக்கட்டுப்பாடு மாத்திரம் தீர்வெனில் ஏன் வேலை செய்யுமிடங்களில் பெண்கள் காமக்களியாட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தினமும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன?கப்பற்படை அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசியர்கள், சட்ட வல்லுனர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேலும் அமெரிக்க ஜனாபதியும் கூட காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ழுன் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த கீழ்காணும் புள்ளிவிவரத்தை நான் வாசித்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
கனடாவில் ஒவ்வொரு 6நிமிடத்திலும் பெண்கள் பலாத்காரப் படுத்தப்படுகின்றனர்.கனடாவிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஓரு முறையிலாவது கற்பழிக்க முயற்ச்சிக்கப்படுவர். நான்கு பெண்களில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையில் கற்பழிக்கப்படும் அபாயத்தில் அல்லது திட்டமிட்டு கற்பழிப்பக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.எட்டில் ஒரு பெண் கல்லுரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டிருக்கும் போது பலாத்காரப்படுத்தப்படுவார். மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அபாயம் இல்லையானால் தாங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிடுவோம் என கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 60 ஆண்கள் தெரிவித்தனர்.
நாம் வாழும் சமூகத்தில் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது. சமூகத்தின் வாழ்க்கை முறையிலும் கலாச்சாரத்திலும் ஒரு அடிப்படையான மாற்றிலும் முற்றிலும் அவசியமானது. ஒழுக்கரீதியான வாழ்க்கை மிகவும் அவசியப்படுகின்றது. உடையில், பேச்சில் ஆண் பெண் இருபாலருடைய பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கம் வேண்டும். இல்லையெனில் மிகவும் மோசமான புள்ளி விபரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் வரும் மேலும் துரதிர்ஷடவசமாக தென் விலையை பெண்கள்தான் கொடுத்து வருவார்கள். இதனால் உண்மையில், நாம் அனைவரும் துன்பத்திற்குள்ளாகிறோம் என்றாலும், நம் நிலை ,க. கிப்ரன் அவர்கள் கூறியது போல் '... அடியை வாங்கிக்கொண்டிருப்பவன் அதை எண்ணிக்கொண்டிருப்பவனைப் போலல்ல.' பெண்கள் வாங்கும் அடியை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்களாவர்கள் ஆண்கள். ஆகவே, ஓழுக்கமாக உடையணிந்து வந்த காரணத்தால் பள்ளிக்கூடங்களிலிருந்த மாணவிகளை வெளியேற்றிய பிரஞ்சு சமுதாயத்தைப் போன்ற சமுதாயங்களெல்லாம் இறுதியில் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறது.
ஆண்களுக்கு பெண்கள் மேலுள்ள அதிகாரத்தை காண்பிக்கும் வகையில் கத்தோலிக்க சந்நியாசிப்பெண்களால் அணியப்படும் தலைமறைவை 'புனித' அடையாளம் என மதிக்கப்படும் அதே வேளையில் பாதுகப்பிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே தலைமறைவை 'அடக்குமுறை'யின் அடையாளம் என கருதப்படுவது இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றானதேயாகும்.

www.orkadavul.com

N.K.ABDULLAH
இஸ்லாத்தில் இறைவனைப்பற்றியும் அவனுடைய வல்லமையையும் அவனுடைய சிறப்பையும் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றான் வல்ல ரஹ்மான்.நாம் வாழக்கூடிய இந்த பூமியில் எத்தனையோ மனித இனங்கள், மதங்கள், இஸங்கள் உள்ளன. அத்தனையும் தன்னால் இயன்ற ஒரு அடிப்படையைக் கொண்டுதான் இப்பூமியில் வளம் வருகின்றது பரிந்தும் பேசுகின்றது. ஆனால் அவை அனைத்தும் அனைத்திற்கும் தனித்தனியான பூமியில் தான் வாழ்கின்றோம் என்று என்றாவது கூறியுள்ளதா? இல்லை!உன் தெய்வம் வேறு! என் தெய்வம் வேறு! என்றெல்லாம் குடுமி சண்டை பிடிக்கும் இஸங்களும் மதங்களும், உன் மதத்துக்கு என்று தனி பூமி என் மதத்திற்கு என்று தனி பூமி என்றாவது கூறுகின்றதா என்றால் அதுவும் இல்லை.
ஆனால் அவை எல்லாம் இந்த ஒரே பூமியின் மீது நின்று கொண்டுதான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் செய்கிறது. இந்த பூமியைப் படைத்த எல்லாவற்றிற்கும் அதிபதியான அல்லாஹ் தன்னால் படைக்கப்பட்ட அற்பமான அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட மனிதனை நோக்கி சற்று வித்தியாசமாக இவ்வாறு கேட்கின்றான்.உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் , (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் ? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் ?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் '' அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ் இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை ; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் ?இந்த பேரண்டத்தைப் படைத்த வல்ல ரஹ்மான் கேட்கும் கேள்வி இதுதான்.இந்தக்கேள்விக்கு இறைவன் காட்டித்தந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு சமுதாயத்திலும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மனிதர்கள் தங்களின் பலஹீனத்தை உணர்ந்து கொள்ள அல்லாஹ் கொடுக்கும் சந்தர்ப்பமாகும். ஏனென்றால் மனிதன் எல்லா விதத்திலும் பலஹீனமாவனாகவே இருக்கின்றான்.மரணத்தைச் சுவைக்காத எந்த மனிதனும் கிடையாது. அதுபோலவே அதை மரணம் என்பது இல்லை என மறுக்கின்ற மனிதனும் கிடையாது. அந்த அளவுக்கு யதார்த்தமான மரணத்தைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மரணிப்பது மட்டுமல்ல மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்றும் மனிதனின் சிந்தனையை வேறொரு பக்கமும் இஸ்லாம் திருப்பிகின்றது.எங்கிருந்து வந்தோம்? எங்கே போகவிருக்கின்றோம்? என்றே தெரியாமல் வாழ்வதைவிட இது பற்றிய சிந்தனையை எந்த வாழ்வியல் நெறி போதிக்கின்றது என்றும் ஆராய்வது காலத்தின் கட்டாய கடமையாகும்.
மனிதன் என்பவன் படைத்த இறைவனை விட்டு படைப்புக்களை வணங்குவது எவ்வகையில் நியாயம் என்பதை இறைவன் கேட்கிறான்:உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா? , என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை(மரணித்த பிறகு) மீண்டும் படைக்கிறான்;(இந்த உண்மையை விட்டு ) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.மேலும் அல்லாஹ் ஒரு அடிப்படையான சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றான்:உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக. அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா ? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா ? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
உண்மையை உணராமல், அல்லது அதைப் பற்றிய சிந்தனை செய்ய மனமில்லாமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் பொய்யான சேற்றைவாரி இறைப்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு சவால் விடுகின்றான்.இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (அருளப்பட்டது) என்பதில் சந்தேகமேயில்லை."
இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா ? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" (4:82)இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா ? (நபியே!) நீர் கூறும் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்! ' என்று.நான் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த வசனம் இந்த மனித சமுதாயத்தின் மீதும் குறிப்பாக இந்தக் குர்ஆனையும் பால்வெளியையும் படைத்த இறைவனையும் மறுக்கும் படைப்பினங்களின் மீதும் அவ்வப்போது முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் தங்களின் பேச்சாளும் எழுத்தாளும் மீடியாக்களின் மூலமும் விஷத்தைக் கக்குகின்ற அறிவு ஜீவி(?)களின் மீதும் இறைவன் பதினான்கு நூற்றாண்டாக முன்வைத்த முறியடிக்கப்படாத சவால் ஆகும்.
இதுவரை பூமியில் தோன்றி மறைந்த, இனித் தோன்றவிருக்கின்ற எவராலும் முறியடிக்க முடியாத நடக்காத காரியம் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது .நான் நினைக்கின்றேன். ஒருவேலை அவர்களின் முஸ்லிம்களின் மீதான காலவரையரையற்ற வெறுப்புக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் .நாத்தீக நண்பர்களின் சிந்தனையோட்டத்தை அவர்களின் சிந்தனை சென்றடையும் கடைசி இடத்தின் எல்லைக்கோட்டை அல்லாஹ் அதாவது படைத்தவன் அப்படியே தத்தரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றான்.அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டையும் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள வல்லமையின் அளவுகோலை மனிதன் உணர்ந்தானேயானால் மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றத்திற்கு மனிதன் வரமாட்டான். மனிதனைப் போலவே சக்தியும் வல்லமையும் கொண்டவன் தான் இறைவனும் என்று மனிதன் நம்புகின்றான். அதனால்தான் மனிதனைப்போன்று இறைவனுக்கும் மனைவி மக்கள் சொந்தம் பந்தம் என்றெல்லாம் மனிதன் கற்பனை செய்கின்றான். இது அபத்தமாகும் இறைவனின் மீது இட்டுக்கட்டும் இழிசெயலாகும்.வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம். ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா ? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்!
இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ' அம்மன் ' என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம் , பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள். இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.
மனிதனின் கற்பனையில் உருவான கட்டுக் கதைகளை வைத்துத்தான் இறைவன் என்ற மகத்தான சக்தியோடு தொடர்பு படுத்தி அந்த சக்தியின் வல்லமையை கேவலப்படுத்துகின்றனர்.அவர்களில் இதன் மீது நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கின்றனர் இதன் மீது நம்பிக்கை கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான். (அல்குர்ஆன் 10:31 to 10:40.)ஆக மனிதனுக்கும் இறைவனுக்கும் மகத்தான மலையளவுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது அதையெல்லாம் சாதாரணமாக மறந்துவிட்டு மனிதனும் இறைவனும் சமமே என்பதும், இறைவனுக்கும் இணை துணை உண்டு என்பதும் எங்கோ யாருக்கோ வந்த சிந்தனைக்கோளாறு. அல்லது யாரோ வயிறு பிழைக்க எடுத்த வடிகட்டிய முட்டாள்தனம்.
எனவே மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையோராகலாம். 2:21