சனி, 10 அக்டோபர், 2009

நாத்திகம் பகுத்தறிவு வாதமா...? பாகம் 2
நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை...!
இறைவனை நம்பிச் செயல் படத் தயங்கும் மனிதன் தனது வாழ்வில் தனது காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல் பட வேண்டிய நிர்பந்த நிலையில்தான் இருக்கிறான் படிக்கும் மாணவன் திறமையுடன் படித்து முடித்தால் உயர்ந்த உத்தியோகமும் அதன் மூலம் வளமான வாழ்வும் கிடைக்கும் என்று நம்பித்தான் படிக்கிறான். உயர்ந்த உத்தியோகத்தையும் வளமான வாழ்வiயும் கண்ணால் பார்த்த பின் படிக்க ஆரம்பிப்பதில்லை. விவசாயி வீட்டில் பாதுகாப்பாக இருந்த நெல்லை வயலில் கொண்டு கொட்டுகிறான் என்றால் ஒரு மூட்டைக்குப் பகரமாக பல மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பித்தான் செய்கிறான். வியாபாரி கையிலுள்ள முதலையெல்லாம் போட்டு வியாபாரம் செய்ய முற்படுகிறானென்றால் அதை விட அதிகம் முதல் கிடைக்குமென்று நம்பியேச் செய்கிறான். ஆக மனிதன் செய்யும் ஒவ்வோரு செயலும் நம்பிக்கையின் அடிப்படையிலேNயு பிறக்கின்றது. நம்பியபடி கிடைக்கின்றது. கிடைக்காமலும் போகலாம்.இரண்டிற்கும் வாய்ப்பு உண்டு! இருந்தாலும் மனிதன் நம்பிச் செயல் படத்தான் செய்கிறான். அதிக மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வீட்டிலிருந்த நெல்லையும் உரத்தையும் வயலில் கொட்டியவன் மழையில்லா காரணமாக பயிர் காய்ந்து நஷ்டப்படவும் நேரிடுகிறது. அதனால் அவன் விவசாயத்தை விட்டு விடுவதில்லை.
மனிதனது ஒவ்வொரு முயற்சியிலும் அவன் நம்பிக்கை வைத்ததற்கு நேர் மாற்றமாக நஷ்டம் அடையும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. அதன் காரணமாக அதன் பின் மனிதன் அந்த முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. இப்படி உலகக் காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல்படும் மனிதன் மறு உலக வாழ்க்கை விஷயத்தில் மட்டும் நம்பி செயல் படத் தயாராக இல்லை. என்பது விவேகமான செயலா? என்பதை சிந்திக்கவும். நம்பிச் செயல்படும் உலக காரியங்களின் பலன்களை உலகிலேயே கண்டு விடுகிறோம். மறுமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படி அல்லவே? என்று கூறுவதும் தவறான கூற்றேயாகும். நம்பிச் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலனையும் கண்டு கொள்ள வௌ;வேறு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சிலவற்றின் பலன்களை பல மாதங்களில் பார்க்கிறோம் சிலவற்றின் பலன் களை சில மாதங்களில் பார்க்கிறோம் சிலவற்றின் பலன்களை சில வருடங்களில் பார்க்க முடிகின்றது ஆக ஒவ்வொன்றிற்கும் பலனைப் பார்க்க கால அவகாசங்கள் கண்டிப்பாகத் தேவைப் படுகின்றது அந்தக் கெடு தீருமுன் பலனைப் பார்க்க முடியாது. ஒரு விவேகி அப்படிப் பார்க்க முற்படவும் மாட்டான். இதுபோல் மறு உலக வாழ்க்கையின் பலன்களைப் பார்க்க மரணம் காலக்கெடுவாக இருக்கிறது. அந்தக் கெடு தீரு முன் பலன்களைப் பார்க்க முற்படுவது அறிவுடைமையா? என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள்!
காலம் கனியுமுன்...?
தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதுதான் குழந்தையின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. கை.கால்.காது.மூக்கு. இன்னும் இதயம் உள்பட அனைத்து உறுப்புகளின் பலனையும் தாயின் கர்ப்பப் பையிலேயே குழந்தை அறிய முற்பட்டால் அது முடிகிற காரியமா? தாயின் கர்ப்பப் பை என்ற இருளிலிருந்து இந்த உலகத்திற்குவந்த பின்னரே அவற்றின் பலன்களை குழந்தை காண்கிறது. ஊனமுள்ளதாகக் குழந்தை பிறந்தால் இந்த உலகில் வாழும் காலமெல்லாம் ஊனமாகவே வாழ்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறது. பத்து மாதத் தயாரிப்பு உதாரணமாக ஐம்பது வருடங்கள் வாழ்ந்தால் அதாவது 600 மாதங்களின் வாழ்வைப் பாதிக்கிறது இதை எந்த நாஸ்திக நண்பரும் மறுக்க மாட்டார். என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இதே அடிப்படையில் தாயின் கர்ப்பப் பையில் 10 மாதங்களில் தயாராகும் உடல் இவ்வுலகில் வந்து அதை விட பல மடங்கு அதிகமான காலம் கர்ப்பப் பையில் தயாரானதற்கு ஒப்ப நலன்களையோ கெடுதிகளையோ அனுபவிப்பது போல் இவ்வுலகில் தயாராகும் ஆன்மா மறுஉலகில் போய் நலன்களையோ. கெடுதிகளையோ அனுபவிக்கும் என்பதையும். குழந்தை இவ்வுலகிற்கு வந்த பின்னரே உடல் உறுப்புகளின் பலன்களைப் பார்க்கிறது கர்ப்பப் பையில் பார்க்க முடியவில்லை. என்பது போல் மறு உலகின் லாப நஷ்டங்களை அங்கு போன பின்னரே அறிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியாது. என்பதையும் உடலின் உறுப்புகள் கர்ப்பப் பையில் தயாரானது போல் ஆன்மா இவ்வுல கிலேயே தயாராகியே ஆகவேண்டும். என்பதையும் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்!
இந்த மறுக்க முடியாத உண்மைகளை நாஸ்திக நண்பர்கள் விளங்கி தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அப்படியானால் தான் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியும்;. கைமேல் பலன்களைப் பார்த்துத்தான் செயல்படுவேன் என்று அடம் பிடிக்கும் மனிதன். இவ்வுலகிலும் வெற்றி பெற முடியாது. மறு உலகிலும் வெற்றி பெற முடியாது.!
இறைவன் அக்கிரமங்களைப் பார்த்துக்; கொண்டிருக்கலாமா...?
அடுத்து நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கும். இன்னொரு பெரிய சந்தேகம். 'அப்படி இறைவன் ஒருவன் இருந்தால் உலகில் நடைபெரும் அக்கிரமங்களை எல்லாம் எப்படிப் பார்த்துக் சகித்துக் கொண்டிருக்கிறான்? உடனடியாக தவறு செய்பவர்களை இறைவன் தண்டித்தால். இப்படிப் பட்ட தவறுகள் இடம் பெறாதல்லவா? உலகில் தவறுகள் மலிந்து காணப்படுவதால் அப்படி ஒரு இறைவன் இருக்க முடியாது. என்பதாகும் இதைப்பற்றி அடுத்து விரிவாகப் பார்ப்போம்!
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால். இந்த உலகில் நடக்கும் பஞ்சமா பாதகங்களை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும் தீமைகளை நடக்கக் காண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும்போது. இறைவன் எப்படி கண்டும் காணதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது. என்பது நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக் கூடிய பெரிய சந்தேகம். ஏன் இது அவர்களின் வாதமுங்கூட.
நாஸ்திக உள்ளங்களில் இந்த எண்ணம் மேலோங்கி இருப்பதற்குக் காரணம் அவர்கள் சிந்தனை கள் அனைத்தும் இந்த உலகைப் பற்றி மட்டும் அமைந்து இருப்பதேயாகும். அவர்களுக்கு இந்த உலகம் மிகப்பெரிய ஒன்றாகவும். அதில் இடம்பெரும் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும் தெரிகின்றன. மனித இயல்பும் அதுவே. ஒன்றைப்பற்றிய தாழ்ந்த எண்ணங்கள் எப்பொழுது மனித உள்ளத்தில் ஏற்படுமெ ன்றால். அதைவிட உயர்ந்த ஒன்றை அறியும்போதுதான் ஒரு உதாரணம். கரும்பலகையில் சுமாரான ஒரு பெரிய கோடு வரையப்பட்டிருக்கிறது. அந்த ஒருக்கோட்டை மட்டும் பார்க்கும்போது நம் கண்களுக்கப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் கோட்டுக்குப் பக்கத்திலே அதைவிட இரு மடங்கு பெரிதான இன்னொரு கோட்டை வரைந்து விடுவோமானால் முன்பு நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிந்த அந்தக் கோடு சிறியதொருக் கோடாக ஆகிவிடுகிறது. சுருக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போதுதான் சிறியதும் பெரியதும். அவசியமானதும் சாதாரணமானதும் நமக்கு எளிதில் புரிகின்றது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு. அதைப் பற்றி மட்டுமே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தால். அவனுக்கு அந்த ஒன்று மட்டுமே பெரிதாகவும் பிரமாதமாகவும் தெரியும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே நாஸ்திக நண்பர்கள் இந்த உலகம் ஒன்றை மட்டுமே நம்பி அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால் அதுவே வாழ்க்கையின் அனைத்து லட்சியமும் என்று எண்ணுகிறார்கள். இதையும் ஆச்சரியப்படுவற்கு ஒன்றுமில்லை;.
மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கை- மறு உலகம் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு இல்லை அதன் காரணமாக மனித இயல்பின்படி அவர்களின் சிந்தனை அவ்வாறே அமைந்திருக்கும். உலக காரியம் ஒவ்வொன்றும் மிகவும் பாரதூரமானதாகவும் அவற்றில் சில நியாயமற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றும்
வயிற்றில் ஒரு பெரிய கட்டி. அதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வைத்தியர் முற்படு கிறார் வயிற்றைக் கீறியே கட்டியை அகற்றி குணப்படுத்த வேண்டும் என்பது வைத்தியருக்கும் விஷயம் அறிந்தவர்களுக்கும் நியாயம் என்று படுகிறது விஷயம் அறியாதோருக்கு வயிற்றைக் கீறும் செயல் மிகப்பெரும் கொடுமையாகத் தோன்றும். காரணம் முன்னவர்கள் பின் விளைவை விளங்கியிருக்கிறார்கள். பின்னவர்கள் பின் விளைவை விளங்கிடாதவர்கள்- அறியாதவர் களாக இருக்கிறார்கள். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. மேற்காட்டிய உதாரணத்தில் பின்னவர்களாக நாஸ்திக நண்பர்கள் இருப்பதால் உலகில் நடை பெறும் பல சம்பவங்கள் நியாயமற்றவைகளாக அவர்களுக்குத் தோன்றுகின்றன!
மரணத்திற்குப் பின்னுள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி வேண்டுமானால். நாஸ்திகர்கள் நன்கு விளங்கிக் கொண்டபின் சிந்தித்துக் கொள்ளட்டும். இப்போது இங்கே அவர்களும் மறுக்க முடியாத சில மாபெரும் உண்மைகளை அவர்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு விருந்தாகத் தருகிறோம்.
மறுக்க முடியாத உண்மைகள்...
நாஸ்திகர்கள் மிகவும் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கும் (பூமி) சூரியக் குடும்பக் கோள் களிலேயே மிகச் சிறிய ஒன்றாகும். அண்ட வெளியில் காணப்படும் பெரும் பெரும் கோள்களுக்கு முன்னால் இந்த பூமி எம்மாத்திரம்? பூமி தன்னைத்தானே சுற்றிவர ஒருநாள் ஆகிறது. ஏனைய சில கிரகங்களோ தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வர எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணி த்துக் கூறுகிறார்கள். விஞ்ஞான உலகம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணற்ற பெரிய கோளங்கள் இருந்தாலும் அவைகளுள் இந்த பூமியைத் தவிர வேறு எந்த கோளத்திலும் மனித சஞ்சாரம் இருப்பதாக இதுவரை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியென்றால் மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரும் கோளங்கள் இயங்க வேண்டியதன் அவசியமென்ன? இதை நாஸ்திக நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு மனித வாழ்வு மரணத்தோடு முற்றுப் பெறுவதில்லை உலகில் தோன்றி நெறிமிக்க நிறை வாழ்வு வாழ்ந்த இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றதுபோல் மரணத்திற்குப் பின்னால் தான் மனிதனுடைய உண்மையான வாழ்வே ஆரம்பமாகிறது. என்பது எளிதில் புரியும். அப்போதுதான் இன்று உலகில் நியாயமானது நியாயமற்றது என்று சொல்லப்படுபவற்றை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளமுடியும். காரணம்.
நியாயமானவை என்று சொல்லப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள் இவ்வுலக வாழ்வில் பெரும் பாலும் வறுமை. கஷ்டம். துன்பம் ஆகியவற்றை அனுபவிப்பதையே பார்க்கிறோம். இதற்கு நேர் மாற்றமாக நியாயமற்றவை என்று கருதப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள் பெரும்பாலும் செல்வ செழிப்பிலும் சந்தோஷ த்திலும் மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். நாஸ்திகர்கள் சொல்வதுபோல் மரணத்தோடு வாழ்வு முடிவு பெறுகிறது என்றால். இவ்வுலகில் செழிப்பையும் சந்தோஷத்தையும் தரும் காரியங்கள் நியாயமானவையாக வும். வறுமை கஷ்டம் துன்பம் தரும் காரியங்கள் நியாயமற்றவைகளாகவும் மக்களால் கருதப்படவேண்டும். நிலைமை அவ்வாறில்லை என்பதை நாஸ்திகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனித செயல்களின் விளைவுகள் இவ்வுலகோடு முற்றுப்பெறுவதில்லை. அவை மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்றன. என்பதைத் தெளிவாகத் தெரியமுடிகிறது. நற்செயல் புரிபவன் இவ்வுலகில் வறுமை கஷ்டம் துன்பம் இவற்றில் கிடந்து உழன்றபோதிலும் மறுமை வாழ்வில் அவன் புரிந்த நற்செயல்- நியாயமான செயல் களுக்குரிய நல்ல பலனை காண்பது உறுதி. அதே போல் நியாயமற்ற செயல்களைப் புரிபவன் இவ்வுலகில் செல்வச்செழிப்புக் கொழிக்க இன்பம் அனுபவித்து வாழ்ந்த போதிலும் மறுமை வாழ்வில் அவன் புரிந்த நியாயமற்ற செயல்களுக்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான்.
இந்த நிலை இருக்குமானால் தான் இன்று உலகில் நியாயமானசெயல்கள். நியாயமற்றசெயல் கள். என்று தரம் பிரித்து வைப்பதில் நியாயம் இருக்க முடியும். மனிதனுடைய செயல்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென்று ஒருநாளை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். அதனால்தான் பரீட்சா வாழ்வு நடத்தும் மனிதன் உடனுக்குடன் உரிய விசாரணை. தீர்ப்பு. தண்டனை வழங்கப்படாது விடப்பட்டிருக்கிறான்.
அல்லாஹ் நாடினால் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக