புதன், 18 நவம்பர், 2009

Ahmad Baqavi
காலத்தால் முரண்படாதது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக
இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்? என்னென்ன கண்டு பிடிக்கப்படும்? என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும . ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும்பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்றஅதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.அது போல் மனிதன் உயிரினங்கள், தாவரங்கள், மலைகள், கடல் களைப் பற்றிப் பேசுகிறது. அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரைகண்டுபிடிக்கப் படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது
இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்றஅரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர்ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார்.
முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங் களையும் ஆய்வுசெய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவதுமுஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு
ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம். முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன.
எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தை யாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34)
இந்த அறைகூவல் 14நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை.
இது வரை ஒரு சொல் கூட மாற்றப்படவில்லை.

{فَانطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَاراً يُرِيدُ أَنْ يَنقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْراً }الكهف18:77
أبوا أن يضيفوهما ( أتوا أن يضيفوهما
நபி மூஸா (அலை) அவர்கள் கிள்ரு (அலை) அவர்களுடன் ஒரு நகரத்திற்குச் சென்று சில சேவைகள் செய்துவிட்டு அம்மக்களிடம் உணவு கேட்டபோது ” ஃஅபவ் அன் யுளய்யிபூஹ{மா” அவர்கள் அவ்விருவருக்கும் உணவளிக்க மறுத்துவிட்டனர். இந்தச் செய்தி குர்ஆனில் 18:77ல் வருகிறது.பிற்காலத்தில் ”அந்தாக்கியா” என்ற நகரை ஆண்டுவந்த மன்னனுக்கு தமது நாட்டைப் பற்றிய மக்கள் இறுதிநாள் வரை எண்ணிக் கொளவார்களே எனக்கருதி அதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய விரும்பி அறிஞர் ரெமுக்களை அழைத்து அதில் ஒரே ஒரு புள்ளியை மேலே சேர்த்துவிட்டால் நமதூருக்கு பெருமை வருமல்லவா என வேண்டிக் கொண்டார்.
” அபவ்” என்ற சொல்லில் உள்ள ”பாவின்” கீழே உள்ள எழுத்தில் வரும் ஒருபுள்ளியை மேலே எழுதி ஒரே ஒரு புள்ளிளைச் சேர்த்துவிட்டால் ‘‘அதவ் “ அதாவது அவர்களுக்கு விருந்தளிக்க முன் வந்தார்கள் என்ற பெருமை கிடைக்குமல்லவா? என விளக்கமளித்துந் கூறினார். அதைக் கண்டு வெகுண்டெழுந்த உலமாக்கள் வல்ல நாயனின் வாசகத்தில் ஒருபுள்ளியைக்கூட கைவைக்கக் கூடாது என குரல் எழுப்பினர். உடனே அந்த முயற்சி கைவிடபபட்டது.எவராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அடுக்கு மொழி :
நிரோட்க வாக்கியங்கள் (கவிதைகள்)மாலை மாற்று அணி ( ஆங்கிலத்தில் Pயடடiனெசழஅந)புள்ளி உள்ள எழுத்துகளால் வார்த்தைகள்- கவிதைகள்புள்ளி இல்லாத எழுத்துகளால் வார்த்தைகள்- கவிதைகள் ஒரு மொழியின் எல்லா எழுத்துகளையும் ஒரு சொற்றொடரில் அமைத்துக்காட்டும் அணி நயம் ஆங்கிலம் போன்ற சில மொழிகளில் உண்டு. இதற்கு Pயபெசயஅ என்பார்கள் ஆல இமரான் தும்ம அன்ஸல எனத் தொடங்கும் 154 வது வசனம், பதஹ் அத்தியாயத்தில் முஹமதூரஸுலுல்லாஹ் எனத் ;தொடங்கும் 29 வது வசனம்
{ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّن بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُّعَاساً يَغْشَى طَآئِفَةً مِّنكُمْ وَطَآئِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِاللّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَل لَّنَا مِنَ الأَمْرِ مِن شَيْءٍ قُلْ إِنَّ الأَمْرَ كُلَّهُ لِلَّهِ يُخْفُونَ فِي أَنفُسِهِم مَّا لاَ يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الأَمْرِ شَيْءٌ مَّا قُتِلْنَا هَاهُنَا قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحَّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ }آل عمران154
{مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعاً سُجَّداً يَبْتَغُونَ فَضْلاً مِّنَ اللَّهِ وَرِضْوَاناً سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْراً عَظِيماً }الفتح29
திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும்பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்றஅதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விடஅழகாகப் பேசுகிறது.
தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை. அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரைகண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர்ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்க ளையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்குஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது. குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.
முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தை யாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34) இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை.

யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.முஹம்மது நபியவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.முஹம்மது நபி அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு. ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர். பல காரணங்களால் இது தவறாகும்.
மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் குர்ஆன் கூறுகிறதே தவிர யூதகிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை. இவர் அவரைப் பெற்றார், அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க
வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்க ளாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது. இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.
யூத கிறித்தவ வேதங்களில் மிகப் பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளும் மட்டுமே உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும காணப்படவில்லை. ஆனால், திருக்குர்ஆன் மிகக் குறைந்த அளவில் மனிதர்கள் படிப்பினை பெற தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது.

மேலும் மனிதன் சந்திக்கின்ற அனைத்துப்பிரச்சனைகளிலும் ஏற்கத் தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையற்றதாகும். மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத கிறித்தவ மக்களும் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத் தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழி காட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. எனவே முற்றிலும் இது இறைவன் புறத்திலுருந்து நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.
எதிர்பார்ப்புகள் இல்லை
முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தார் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு
நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த லாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும் நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர். எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம்.
இருக்கின்ற செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும். அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும்
அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள். பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்தவர் இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன் வர மாட்டார். ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளா தாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.
• இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை.
• அரண்மனையில் வசிக்கவிலிலை.
• கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
• அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார
சாப்பிடவில்லை.
• ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும்,
தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே
மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
• வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை.
இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
• தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
• ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச்சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது எனடறு பிரகடனம் செய்தார்கள். நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார். மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகத்திலிருந்து விடுபடுவார். புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.
• ‘கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது
எனக்குத் தெரியாது’
• ‘என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது’
• ‘தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது’
• ‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’
என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகிறது. நீர் எப்படி மனிதருக்கு அஞ்சுகிறீர் எனக்கு ஏன் அஞ்சவில்லை என்று கடவுள் தம்மைக் கண்டித்ததாகக் கூறினார்கள். கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது, அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் அவரிடம் தான் நடந்து கொண்ட முறையை இறைவன் கண்டித்ததாகக் கூறினார்கள். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் தமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள்.
தானே கடவுள் என்று அறிவித்தாலும் நம்பும் அளவுக்கு மக்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தும் தம்மையும் அவர்களைப் போன்ற மனிதராகவே கருதினார்கள். இந்த விபரங்கள் யாவும் இறைச் செய்தி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன.
தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று
சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாகவே இருக்கவே
முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
• அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை!
• அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை!
• காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
• தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!
• ‘இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப்
புகழாதீர்கள்’ என்று எச்சரித்தார்கள்!
மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்
விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை.
மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகக் கடவுள் வார்த்தை என்று கற்பனை செய்தார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.
{الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوباً عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأَغْلاَلَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ }الأعراف157
{قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللّهِ إِلَيْكُمْ جَمِيعاً الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ لا إِلَـهَ إِلاَّ هُوَ يُحْيِـي وَيُمِيتُ فَآمِنُواْ بِاللّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ }الأعراف158
{هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ }الجمعة2
وَمَا كُنتَ تَتْلُو مِن قَبْلِهِ مِن كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذاً لَّارْتَابَ الْمُبْطِلُونَ 29:48 ( اذا لارتاب المبطلون)
وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ وَلَـكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ الْكِتَابِ لاَ رَيْبَ فِيهِ مِن رَّبِّ الْعَالَمِينَ{10:37 }
அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறுகின்து. அல்குர்ஆன் 10:37-38
அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையா ளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 11:13
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும். நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.’ அல்குர்ஆன் 11:35

وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لاَ يَرْجُونَ لِقَاءنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَـذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاء نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (يونس15 )
அவர்கள் மீது (அந்த மக்கள் மீது) தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை (மறுமை நாளை)நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும் அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு பதிலாக மூன்று விசயங்களை தெளிவு படுத்துமாறு முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான்.

1. قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاء نَفْسِي ‘என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை,
2. إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ .என் மீது வஹீயாக (இறை தூதாக) அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை,
3.إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்றும்(நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 10:15
அடுத்து அவர் உம்மீ எழுதப்படிக்கத் தெரியாதவர் எனவும் குர்ஆன் 7:157,7:158, 62:2 மிகத் தெளிவாகவே கூறுகிறது. மேலும்
وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை
செய்யப்பட்டதன்று, (அல்லாஹ்வே அதை அருளினான்.) 10:37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக