புதன், 18 நவம்பர், 2009


குர்ஆன் இறைவேதம் தான்- 1
Ahmad Baqavi
‘திருக்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு வரலாற்றுச் சான்று களாலும், அறிவியல் சான்றுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் உலகில் நிரூபிக்கப்பட்டுவிட்டன. இங்கே இலக்கியச்சான்றுகளை கீழே தரவிரும்புகிறோம்.
23 ஆண்டுகளாக முஹம்மது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனிய வசனங்கள் யாவும் ஒரு மாபெரும் இலக்கியம் தான். அவை அனைத்தையும் இங்கே விவரிக்க வேண்டு மானால் குறைந்தது 23 ஆண்டுகளாவது ஆகும்.இருப்பினும் இங்கே தொடர்ந்து சிலவற்றை காண்போம்.
அதன் உயர்ந்த நடை, முரண்படாத நிலை, காலத்தால் அழியாதது, வளைந்து கொடுக்காதது, சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது, விரிவான விளக்கங்கள், பாமரர்களும் புரிந்து கொள்வது,இசை நயம், கவிதை நயம், உவமைச் சிறப்புகள் என அடிக் கொண்டே போகலாம்.
குர்ஆன் ஒரு மாபெரும் இலக்கியம்.
திருகுர்ஆன் இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் ‘ குர்ஆன் முஹம்மதுநபி அவர்களால் எழுதப்பட்டதே’ என்று நினைக்கின்றனர். இது தவறாகும்.அவர் சுயமாக குர்ஆனை எழுதினார் என்றும், யூதர்களிடமிருந்து கேட்டறிந்து குர்ஆன் செய்திகளைக் கூறினார் என்றும் அன்றைய அரபிகளே குறை கூறினார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை என்று அன்றே நிரூபிக்கட்டு விட்டது. நபிகள் நாயகத்தின் பேச்சுகளில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே உலகுக்கு பிரகடனம் செய்கிறது
.وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
இது அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், (இந்தமுஹம்மது) நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப் பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர இவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அல்குர்ஆன் 69:44 கூறுகிறது.
அந்த அரபு மக்கள் முஹம்மதுடைய இறைத்தூதை ஏற்றுக் கௌ;ளாது நீர் வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும் அல்லது அதை மாற்றி வாரும் எனக்கூறுpயபோது قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاء نَفْسِي ‘ அதை என் விருப்பம் போல் மாற்றிவிட எனக்கு எந்த உரிமையில்லை (10:15)என்று அந்த மக்களுக்குத் தெரிவித்துவிடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
மேலும்
وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனைசெய்யப்பட்டதன்று. (அல்லாஹ்வே அதை அருளினான்.) 10:37 என்றும் மிகத் தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.
ஆகவே இந்த குர்ஆன் முஹம்மது நபியால் எழுதப்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.
அடுத்து, அவர் கற்பனை செய்து சுயமாகக் கூறியருக்க முடியாது என்பதற்கு நியாமான பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
முரண்பாடின்மைமனித இயல்பிலே அவனது பேச்சுக்களில் அவ்வப்போது முரண்பாடுகள் நிகழ்வதைக் காணலாம். சில ஆண்டுகள் சென்றுவிட்டாலே கேட்கவேண்டிய தில்லை. மறதியினாலோ, கவலையினாலோ வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் பிரச்சனைகளாலோ, வெற்றி தோல்விகளாலோ,அரசியல் சமூகஆதாயங்களுக் களுக்காகவோ வயது முதிர்ந்து தளர்ந்து விடுவதாலோ, தன் கருத்தை பின்னர் மாற்றிக்கொள்வதாலோ முன்னர் பேசியதற்கு மாற்றமாகப் பேசுவதை நாம் கண்டு வருகிறோம்.இது போன்ற பல்வேறு விதமான பலகீனங்கள் மனிதனிடம் காணப்படுவதால் முரண்பாடுகள் இல்லாத மனிதனைக் காணவே முடியாது.
ஆனால் திருக்குர்ஆனை 23 ஆண்டுகளாக சிறிது சிறிதாகப் போதித்த முஹம்மநபி அவர்கள் தமது சுய கற்பனையால் பேசியிருந்தால் அவர்களி டமும் இவ்வித முரண்பாடுகள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நாம் சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுமில்லாத ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடுகள் இல்லாமலிருக்க முடியும். ஆகவே இந்த குர்ஆன், இறைவனிடமி ருந்து அருளப்பட்டதால் தான் இதில் முரண்பாடு எதுவுமில்லை என்று மனித குலத்துக்கு அறைகூவல் விடுக்கிறது. أَفَلاَ يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللّهِ لَوَجَدُواْ فِيهِ اخْتِلاَفاً كَثِيراً (4:82)
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:82 என்று கூறுகிறது.
மிக உயர்ந்த இலக்கியம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதன் கூறும் செய்திகளைவிட அனைத்து வகையிலும் அனைத்தையும் மிகைத்து நிற்கும் வகையில் முதல் தரமாக அமைந்திருக்க வேண்டும்.இதை ஆய்வு செய்த அரபுமொழியை அறிந்த முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மனிதனால் எட்ட முடியாத அளவுக்கு மிக உயர்ந்ததரத்தில் அமைந்திருப்பதை அறிவார்கள்;. இதனால் தான் அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டு களாக மதிக்கப்பட்டு வருகிறது.
இன்று நாம் கருதும் மாபெரும் இலக்கியங்ளில் பொய்களும், கற்பனைகளும் மிகையான வர்ணனைகளும்,புகழ்மொழிகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். அவை அல்லாத இலக்கியங்களை இன்று காணவே முடியாது.ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! கற்பனை இல்லை. மிகையான வர்ணனைகள் இல்லை! முரண்பாடுகள் இல்லை! ஆபாசம் இல்லை! காமத்துப்பால் இல்லை. நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் வானளாவப் புகழும் புகழ் மொழிகளும் இல்லை!
இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில்; திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும், புலமைமிக்க புலவர்களையும்; வியப்ப்பிலாழ்த்தியது. இன்றும் அதன் உயரிய இலக்கிய நயம் கண்டு உலகே வியந்து நிற்கிறது.
இவ்வளவு பெரிய உயந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் இலக்கிய மேதையாகவும், அரபு மொழியில் புலமை பெற்றவராகவும்;, முந்தைய இலக்கியங்களை கண்டறிந்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.ஆனால் முஹம்மது நபி அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.

وَمَا كُنتَ تَتْلُو مِن قَبْلِهِ مِن كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذاً لَّارْتَابَ الْمُبْطِلُونَ 29:48 ( اذا لارتاب المبطلون)

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதிவந்தவரல்லர். உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.( அதில் நியாயமிருக்கிறது.) (அல்குர்ஆன் 29:48)

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوباً عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள.;அல்குர்ஆன் 7:157
அரபு மொழிப் புலமைபெற்றிராத, முந்தைய இலக்கியங்களை படிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்து எழுதும் தரத்தை விட, அரபு மொழிப் பண்டிதர்கள் உருவாக்கிக் கூறும் தரத்தைவிட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைவனிடமிருந்து வந்த செய்தியாகத் தான் இருக்க முடியும்

2 கருத்துகள்:

  1. முதலாவதாக, மனிதனுடைய பலவீனங்களை பேசிவிட்டு, மனிதர்களுக்கெல்லாம் மாமனிதராக இருக்கும் முஹம்மது நபி அவர்களை ஒப்பிடுவது??? சிந்திக்க வேண்டும்!!!

    "முஹம்மது நபி அவர்கள் தமது சுய கற்பனையால் பேசியிருந்தால்" என்ற வாக்கியம் கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. பதிலாக கீழே உள்ளது போல் தந்திருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

    "ஆனால், திருக்குர்ஆனை 23 ஆண்டுகளாக சிறிது சிறிதாகப் போதித்த முஹம்மது நபி அவர்கள் தமது சுய
    கற்பனையால் பேசியதல்ல, மாறாக நாம் மேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் ஏதுமில்லாத, மனிதர்களுக்கெல்லாம் மாமனிதராக இருக்கும் முஹம்மது நபி அவர்கள் இறைதூதராக ஏக இறைவனின் தூது செய்தியை அப்படியே கூறியதாலும் தான் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக திருக்குர்ஆன் உள்ளது என்பதை சிந்திக்க வேண்டுகிறேன். ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடுகள் இல்லாமலிருக்க முடியும். ஆகவே இந்த குர்ஆன், இறைவனிடமிருந்து அருளப்பட்டதால் தான் இதில் முரண்பாடு எதுவுமில்லை என்று மனித குலத்துக்கு அறைகூவல் விடுக்கிறது. أَفَلاَ يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللّهِ لَوَجَدُواْ فِيهِ اخْتِلاَفاً كَثِيراً (4:82)"

    பதிலளிநீக்கு
  2. முஹம்மது நபி அவர்கள் தமது சுய கற்பனையால் பேசியிருந்தால்" என்ற வாக்கியம் கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. பதிலாக கீழே உள்ளது போல் தந்திருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்

    ஜஸாக்கல்லாஹு கைரன்
    நிர்வாகி

    பதிலளிநீக்கு