புதன், 18 நவம்பர், 2009

குர்ஆன் இறைவேதம் தான் -2
Ahmad Baqavi
எளிய இலக்கியம்.
படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம் எளிய இலக்கியம்.
பொதுவாக உயர்தர இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாகஉயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் எதுவும் அந்த நூலில் இருக்காது. ஆனால திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. கற்றறிந்த பண்டிதர்களையும் கவர்ந்தது.
‘ஆங்கிலக்கவிதையின் முன்னோடி’ எனப் புகழப்படும் சாஸர் ( ஊhயரளஉநச) என்பவரால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்களை இன்று எவராலும் புரிந்து கொள்ளமுடியாதிருக்கும் போது, எழுத்தச்சனின பழம் பெரும் மலையாளம் இன்றைய மலையாளிகளுக்கு விளங்காதிருக்கும் போது 1400 ஆண்டுகள் பழமையான திருக்குர்ஆனை அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அதன் எளிமையை என்னென்பது?(அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் கூட புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது.)
இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலைஇயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலைமக்களிடம் முன் வைத்துத் தான் ‘இது இறை வேதம்’ என்று முஹம்மது நபி அவர்கள் வாதிட்டார்கள்.குர்ஆன் முஹம்மது நபி அவர்களின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும்சான்றாக அமைந்துள்ளது.
வழக்கிலே இருக்கும் இலக்கியம்
சிறந்த இலக்கியம் என்பதற்கு அளவு கோல்: மொழி எவ்வளவு தொன்மையாக இருந்தாலும் அது எல்லா கால மக்களாலும்புரிந்து கொள்ளவும், வழக்கில் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.ஒரு மொழியின் இலக்கியம் 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலே புரிந்து கொள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள். 100 ஆண்டுகள் ஆகிவிட்டால் அது புரியவே புரியாது. அதுவும் 1000 ஆண்டுகள் ஆகிவிட்டாலே அது வழக்கிலே இருக்காது. ஆனால் குர்ஆனின் இலக்கியம் 1400 ஆண்டுகள் ஆகியும் வழக்கிலே இருந்து வருவது அதிசயமல்லவா?
அதற்கு ஒரு உவமை:
إستهزاء ، يستهزء
”யஸதஹ்ஸி வு என்பதில் வரும் ”இஸ்திஹஸா
வழக்கிலே இல்லாத வார்த்தைகள் குர்ஆனில் உள்ளன என ஒரு அறிஞரிடம் கிண்டலாகக் கேட்டபோது அது எங்கே உள்ளது எனக்கேட்டார் அந்த அறிஞர்.அது குர்ஆனில் 2:15,15 வது வசனத்தில் பரிகாசம் செய்வதாக வரும் ”யஸதஹஸி என வரும் ”இஸ்திஹஸா “என்ற சொல்லைக் குறிப்பிட்டார். உடனே,அவரை பக்கத்து கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று குடிசையின் உள்ளே இருந்த முதியவர் ஒருவரை அழைத்து எங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டியதுள்ளது சற்று வெளியே வருகிறிர்ளா? எனக்கேட்டார் அந்த அறிஞர். அவர் வெளியே வந்ததும் ஒன்று மில்லை நீங்கள் உள்ளே போகலாம் எனக்கூறினார். அழைத்து வந்தவர்.சற்று நேரம் சென்று மீண்டும் அதே மதியவரை அழைத்து முன்னு போலவே கூறினார். அவரும் அமைதியாகச் சென்றுவிட்டார். மூன்றாவது முறையும் அவ்வாறே அழைத்த போது முதியவர் கோபமடைந்து هل تستهزئني ” ஹல் தஸ்தஸவுனீ “” என்னை பரிகசிக்கறீர்களா ? என அதே வார்த்தையைக்கூறி கத்தினார். அப்போது அந்த அறிஞர் எந்த வார்த்தை வழக்கிலில்லை என்று கூறினீரோ அதே வார்த்தையை கிராமத்து மக்கள் வரை பயன்படுத்துகிறார்களே என வந்தவரை திருப்திப்படுத்தி விட்டு பெரியவரையும் நிலைமையை இதமாக விளக்கினார் அந்த அறிஞர்.
இசை நயம்!
எந்த இலக்கியமானாலும் அதில் ஒசை அழகும், இசை நயமும் இருக்கவேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்குஉட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்; தான் அவற்றின் இசை நயத்தை நாம் உணர முடியும். இரசிக்கமுடியும்ஆனால் திருக்குர்ஆனில் இசை விதிகளுக்குட்பட்ட அடிகள் இல்லை.மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்திருக்கும்.அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெற்றிருக்காது.
சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சிலவசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும், சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். சில வசனங்களில் ஒரு வார்த்தை கூட வசனமாக இருக்கும்.
இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயத்தை நாம் எதிர் பாகு;கவே முடியாது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர முடியாதோ அந்த நடையில் மனித இதயங்களை ஈர்க்கும் இசை நயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.
அரபு மொழிதெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்குமயங்குகின்றனர். அதன் எதிரிகள் ஒளிந்திருந்து கேட்டு இரசித்தனர். குர்ஆனை காது கொடுத்துக் கேட்கக் கூடாது என பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டவர்கள் கூட தன் உள்ளத்தை பறி கொடுத்தனர். அந்த அற்புதமான இசையில் மயங்காதவர்கள் யார் தான் உள்ளனர்? இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசைநயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக