www.orkadavul.comஇந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றது.
உதாரணமாக சூரியனுக்கு அருகிலுள்ள கோள்களான மெர்குரி மற்றும் வீனஸ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் இவைகளின் சராசரி பகல்நேர வெப்பநிலை 430 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமாக இருக்கிறது. (பூமியின் சராசரி கோடைக்கால வெப்பநிலையே வெறும் 42 டிகிரி சென்டிகிரேடு தான். இதையே நாம் தாங்கிக்கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. மேலும், மெர்குரியில் அதனின் வலுவில்லாத ஈர்ப்பாற்றலால் அங்கு வளிமண்டலமே (Atmosphere) இல்லை. அதனால் அங்கு சுவாசக்காற்று இல்லை. வீனஸில் வளிமண்டலம் இருந்தாலும் அவை பூமியின் வளிமண்டலத்தை விட 90 மடங்கு அதிகம் அழுத்தம் வாய்ந்ததாக இருக்கின்றது.
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்ததாக இருக்கும் கோள்களான ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய யாவும் வாயுக்களான கோள்களாகும். இவைகள் மிகப்பெரிய வாயுக்கள் அடங்கிய பந்துகளாகும். எனவே, இவைகளும் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது. அடுத்ததாக இருக்கும் புளுட்டோ என்ற கோள் சூரியனுக்கு மிக மிக அதிக தொலைவில் இருப்பதால் அதன் வெப்பநிலை -250 சென்டிகிரேடாக இருக்கிறது. இவ்வாறு சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களில் பூமியைத்தவிர மற்ற யாவுமே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும் நிலையில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருப்பதை அறியலாம்.
இந்த அனைத்துக் கோள்களையும் உள்ளடக்கிய அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: -“அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும் நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது” (அல்குர்ஆன்: 67:15)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக