ஏகத்துவமும் இணைவைத்தலும்
Ahmad Baqavi
மனிதன் ஏகத்துவத்திலிருந்து தடம் புரண்ட வரலாறு
அல்லாஹ் ஒருவன் தான்!
மனிதன் ‘தன்னைப் படைத்தவன் அல்லாஹ் தான். அவன் ஒருவனே’ என்னும் ஏகத்துவ நெறியை இயல்பிலேயே பெற்றவனாகவும், அந்த அடிப்படையிலேயே படைக்கப்பட்டவனாகவும் உள்ளான். மனிதன் மட்டுமல்ல. உலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அவ்வாறு தான் படைக்கப்பட்டுள்ளன. அதை அனைத்தும் உணர்ந்தே உள்ளன. இதுவே இயற்கை நிலையாகும்.
இதை மனிதனைப்படைத்த நாயனே தனது உலகப் பொதுமறையாம் அல்-குர்ஆனில் பின் வருமாறு விவரிக்கிறான்.
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நாடவில்லை. அல்லாஹ் தான் (யாவருக்கும்) உணவளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் பெற்றவன். (அல்-குர்ஆன் அத்தாரியாத் : 51:56,57.)

ஒரு மனிதன் தன்னைப்பற்றி தனிமையில் சிந்திக்கத் துவங்கினால் ஓரிறைக் கொள்கையின் பால் சார்ந்து நிற்படையும், அவனையே நம்பி அவனிடம் அன்பு கொண்டு அவனிடமே உதவிதேடுவதையும், இணைவைக்காது வணங்கி வழிபடுவதையும் காணலாம். தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கோட்பாடு இயற்கை நிலையைச் சார்ந்தது. அவனுக்கு மாறுபட்டு இணைவைக்கும் நிலையோ இடையில் ஏற்பட்டதாகும்.
இயற்கை மார்க்கம் இஸ்லாம் தான்!
அல்லாஹ் கூறுகிறான்:-(நபியே!) உண்மை நெறியில் நின்று உமது முகத்தை இந்த (இயற்கை) மார்க்கத்தின் பால் (முற்றிலும்) நிலைப்படுத்துவீராக! இதுவே அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கமாகும்.இந்த நிலையிலே அல்லாஹ் மனிதர்களை படைத்துள்ள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றமும் இல்லை.இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் அர்-ரூம் 30:30)

பிறக்கும் குழந்தைகளும் இஸ்லாம் தான்!
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் இறைவனை ஏற்றுக் கொள்ளும் இயல்புடனேயே பிறக்கின்றன. ஆயினும், அவர்களின் பெற்றோர்களே யூதர்களாகவும், கிறித்தவர்களாகவும், நெருப்பை வணங்குபவர்களாகவும். மாற்றுகின்றனர். ஏவ்வாறெனில், ஒரு மாடு ஊனமுற்றதாக நல்ல நிலையிலேயே ஒரு கன்றை ஈன்றெடுக்கிறது.காலப் போக்கில் (மனிதர்களால்) அதன் காது மூக்கு போன்றவை சேதப்படுத்தப்பட்டு ஊனமுற்றதாக மாறுகின்றது.(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 4402,முஸ்லிம் 4803)
அரபு நாட்டில் தனது ஒட்டகம், மாடு, கன்று எனத் தெரிந்து கொள்வதற்காக இவ்வாறு சேதப்படுத்தி அடையாளமிட்டுக் கொள்வார்கள். இவ்விதம் ஒரு குறிப்பிட்ட குடும்பம், குலம் எனத் தெரிந்து கொள்வதற்காக முகங்களிலும், தாடைகளிலும் கீறி காயப்படுத்தி சில வடுக்களை சூடுபோட்டுக் கொள்வதை ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் காண முடிகிறது.

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது?இறைக் கொள்கைக்கு எதிரான நிராகரித்தலும், இணைவைத்தலும் இறைதூதர் நூஹ்-நோவா- (அலை) அவர்களின் சமூகத்தாரிடமே முதலில் தோன்றியது.
இறைமறையில் இறைவன் இதை பின்வருமாறு விவரிக்கிறான்:-
(நபியே! (இறைதூதர்) நூஹுக்கும் அவருக்குப் பிறகு வந்த இறைதூதர்களுக்கும் நாம் வஹீ (இறைத்தூதை) அறிவித்தவாறே உமக்கும் அறிவித்தோம் (அந்நிஸா: 4:163)

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-
நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மிடையே உள்ள காலம் பத்து நூற்றாண்டுகளாகும். இக்கால கட்டங்களில் மக்கள் அனைவரும் இஸ்லாத்திலேயே இருந்து வந்தார்கள்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கதீர்: பாகம் 2: பக்கம்: 412)

இணைவைத்தல் ஏன் தோன்றியது ?
இணைவைத்தல் (ஷிர்க்) தோன்றுவதற்கு முதற்காரணமே மனிதன் இறைவனின் படைப்புகளை இறைவனின் தகுதிக்கு உயர்த்தியதும், அவர்களிடையே வாழ்ந்து வந்த நல்லோரை வரையறை மீறிப் புகழ்ந்து வந்ததுமேயாகும்.இதையும் இறைவனே கூறுகிறான்:-
மேலும் நூஹ் (அலை) அவர்களின் மக்கள், தமது சமூகத்தாரிடம் உங்களின் (வணக்கத்திற்குரிய) கடவுள்களை விட்டுவிடாதீர்கள்! மேலும் (உங்கள் தெய்வங்களான) வத்து,ஸுவாஉ, யஊது, யகூகு, நஸ்ரு (ஆகிய சிலைகளையும்) விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினார்கள்; (அல்-குர்ஆன் நூஹ்- 71:23)

இந்தச் சிலைகளை நிறுவியவர்கள் இந்த சிலைகளை அவர்களின் நினைவுச் சின்னங்களாகத்தான் அமைத்தார்கள். ஆயினும் அவர்கள் அவற்றை வணங்கவில்லை.அவர்களின் பின்னர் வந்த அவர்களின் சந்ததியினர் (நினைவுச்சின்னம் என்பதை மறந்து) வணங்கத் தலைப் பட்டனர். (ஆதாரம் புகாரி 4539) இதனால் தான் ஒருவரை அளவுக்கு மீறிப்புகழ்வதையும், அன்பு காட்டுவதையும் இறைவன் தடுத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிவிடாதீர்கள். (அந்நிஸா 4: 171)

பின்வரும் இருபண்புகளும் உண்மையை மறைக்கவும், பொய்யை கலக்கவும் காரணங்களாக அமைந்தன.
1. நல்லடியார்களை அளவுக்கு அதிகமாகப் புகழந்தது.நல்லடியார்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினாலும், அவர்களின் உருவங்களை நேரடியாகக் கண்டு கொண்டிருக்க வேண்டுமென்ற விருப்பத்தாலும் அவர்களின் உருவங்களை செதுக்கி வைத்தனர்.
2. நல்லது தீயது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டலை விட்டது.மார்க்க அறிஞர்களும், மதகுருமார்களும் அவர்களின் உருவங்களை வடித்து வைத்திருப்பதால் நன்மை ஏற்படும் எனக்கருதினர். அதுமட்டுமல்ல., இவ்வுருவங்கள் தம் கண் முன்னாலிருந்தால் வணக்கங்களிலும் வழிபாடுகளிலும் பக்தியும் உற்சாகமும் ஏற்படும் எனவும் நம்பினர்.இதன் விளைவாக அவர்களின் சந்ததியினரிடிருந்த எண்ணங்கள் மாறி அந்தக் கல்லுருவங்களையே கடவுள்களாகக் கருதி வணங்கத் தலைப்பட்டனர்.
விளைவு ? மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொல்லாத ஒன்றின் மூலமாக தங்களின் மார்க்க ஈடுபாட்டை ஏற்படுத்தலாம், பக்தியை உருவாக்கலாம் என எண்ணிக்கொண்டு, இறைவனின் மார்க்கத்தில் அல்லாஹ்வின் தூதர்கள் காட்டாத நெறிகளை தாமாகவே ஏற்படுத்திவிட்டு அது நன்மை பயக்கும் என தவறாக நம்பிக் கொண்டனர். நற்செயல் என்பதும் அதற்கு நன்மை கிடைக்கும் என நம்புவதும் அல்லாஹ் கூறியதும், அவனது தூதர் சொன்னதும், செய்ததும்,அங்கீகரிததுமாகும். இதை மீறுவது மார்க்கத்தில் அளவு கடந்ததாகவே கருதப்படும். நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
”நமது மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்ப்படுத்துபவரின் செயல்கள் நிரகரிக்கப்படும்”.(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம், புகழ்கிறோம் எனற பெயரில் புகழ்பாக்கள் எழுதி, அப்பாடல்களில் அவர்களை வரையறை மீறிப் புகழ்ந்து, நபிகளாரை புகழ்வதாகக் கருதிக்கொண்டு வரையறை மீறும் போது அவர்களை அறியாமலே இணைவைத்தல் என்னும் மன்னிக்க முடியாத கொடிய பாவத்தின் பால் தள்ளப்படுகின்றனர். இறுதியில், இது நபிகளார்(ஸல்)அவர்கள் அகில உலகிற்கும் போதிக்க வந்த ‘ஏகத்துவக் கொள்கை’ என்னும் மிகப்பெரிய நெறிப்புரட்சிக்கு எதிராக மாறுகிறது. அதுமட்டுமல்ல, யூத, கிறித்தவர்களைப் போல் நபிகளாரை கடவுள் நிலைக்குக் கொண்டு போகும் அபாயகரமான கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றனர். இவர்களின் செயல்கள் யாவும் வீணாகி இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றி, நரகத்திற்கே விறகுகளாகிவிடுகின்றனர். வல்ல நாயன் அல்லாஹ் இக்கொடிய பாவங்களிலிருந்தும் நம்மைக் காப்பானாக!
மனிதனை மார்க்க நெறிகளிலிருந்தும் தூய இஸ்லாத்தின் புனிதக் கொள்கைகளிலிருந்தும் வெளியேற்றும் அபாயங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிகழும் என்பதை முன்னரே அறிந்த அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களை எச்செரிக்கை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மர்யம் (அலை) அன்னை மரியா அவர்களின் மகன் (ஈஸா(அலை) ஏசுஅவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள். நிச்சயமாக நான் ஒரு அடியானே! என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய (மஸீஹையும்) ஏசுவையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். (திருக்குர்ஆன் 9:31)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகபெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (திருக்குர்ஆன் 4:48)
எனவே இணைவைக்காது அல்லாஹ்வை வணங்கி இம்மை மறுமைப் பேறுகளைப் பெறுவதற்கு வல்ல நாயன் நமக்கு அருள் பொழிவானாக! ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக